முல்லைத்தீவில் தந்தமும் தலையும் துண்டிக்கப்பட்ட நிலையில் யானையின் உடல் மீட்பு

by Bella Dalima 18-10-2022 | 8:29 PM

Colombo (News 1st) முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட மூன்றுமுறிப்பு, கொம்புவைத்தகுளம் பகுதியில் தந்தமும் தலையும் துண்டிக்கப்பட்ட நிலையில் யானை ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 

வயலுக்கு சென்ற விவசாயிகள் வழங்கிய தகவலையடுத்து,  கிராம அலுவலர் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி  வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியுள்ளார். 

சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்கள மற்றும் வனஜீவராசிகள் கால்நடை மருத்துவக் குழுவினர் உடற்கூறு  பரிசோதனை மேற்கொண்டிருந்தனர். 

யானை துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது. 

யானையின் உடல் அழுகியுள்ளதுடன், தலை துண்டிக்கப்பட்டு தந்தங்கள் வெட்ப்பட்டு, அதன் தும்பிக்கையும் வாலும்  வெட்டப்பட்டுள்ளன.