மன்னாரில் பஸ் மோதி முதியவர் பலி

மன்னாரில் பஸ் மோதி முதியவர் பலி

by Bella Dalima 18-10-2022 | 4:34 PM

Colombo (News 1st) மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலகம் அருகில் வீதியில் நின்றுகொண்டிருந்தவர் மீது பஸ் மோதியதில் காத்தான்குளம் பகுதியை சேர்ந்த 74 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். 

விபத்தின் போது பலத்த காயமடைந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னர் அந்நபர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பஸ் சாரதியும் நடத்துனரும் விபத்தின் பின்னர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்களும் பிரதேச மக்களும் விபத்து இடம்பெற்ற இடத்தில் முரண்பட்டதால், விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதன் பின்னர் குறித்த பஸ் சம்பவ இடத்திலிருந்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மன்னார் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.