.webp)
Pakistan: பாகிஸ்தான் பாராளுமன்ற இடைத்தோ்தலில் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-எ-இன்சாஃப் கட்சி (Pakistan Tehreek-e-Insaf) தலைவருமான இம்ரான் கான் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த ஏப்ரலில் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது, PTI கட்சியிலிருந்து 8 பாராளுமன்ற உறுப்பினர்களும், பஞ்சாப் மாகாணத்தின் 3 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி விலகியதால் காலியான இடங்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது.
இதில் 7 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட இம்ரான் கான், அவற்றில் 6-இல் வெற்றி பெற்றாா். மேலும், பஞ்சாப் மாகாணத்தின் 3 தொகுதிகளிலும் அவா் போட்டியிட்டு வென்றாா். இது, ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.