.webp)
Colombo (News 1st) களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டம் நடத்த 6 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டு போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதுடன், சிலர் கைது செய்யப்பட்டனர்.