.webp)
Colombo (News 1st) யாழ். காரைநகர் வீதியின் ஓட்டுமடம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறியொன்று எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
நேற்று (14) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதுடன், சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாவான்துறை வடக்கை சேர்ந்த 33 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.