.webp)
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரனை படுகொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன பிணை வழங்கினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டு இந்த நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமையவே, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் சட்டத்தரணிகளாக கே.எஸ்.ரட்ணவேல், சுரங்க பண்டார, ரனிதா மயூரன், சுவாதிக்கா ரவிச்சந்திரன் ஆகியோர் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகியிருந்தனர்.
சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் அசார் நவாவி ஆஜராகியிருந்தார்.