.webp)
Colombo (News 1st) T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான முன்னோடியாக சிம்பாப்பேக்கு எதிராக இன்று நடைபெற்ற பயிற்சிப்போட்டியில் இலங்கை அணி 33 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே வீரர்கள் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தனர்.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 188 ஓட்டங்களைப் பெற்றது.
குசல் மென்டிஸ் 29 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பெற்றார். அதிரடியாக துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்க நான்கு பவுண்டரிகள் இரண்டு சிக்சர்களுடன் 14 பந்துகளில் 37 ஓட்டங்களை விளாசினார்.
வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சிம்பாப்வே அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களையே பெற முடிந்தது.
Wessly Madhevere 42 ஓட்டங்களை பெற்றார்.
மஹீஸ் தீக்சன மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கட்களை வீழ்த்தினர்.