IMF வருடாந்த மாநாட்டிற்காக இலங்கை குழு பயணம்

IMF மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டிற்காக இலங்கை பிரதிநிதிகள் குழு பயணம்

by Staff Writer 09-10-2022 | 3:03 PM

Colombo (News 1st) அமெரிக்காவின் வொஷிங்டனில் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையிலான 08 பேர் கொண்ட தூதுக் குழு மாநாட்டில் பங்கேற்கவுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகள் குழுவொன்று இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளது.

நாளை(10) ஆரம்பமாகவுள்ள இந்த மாநாடு எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.