வடக்கு மார்க்க ரயில் ​போக்குவரத்து சீரானது

வடக்கு மார்க்க ரயில் ​போக்குவரத்து சீரானது

by Staff Writer 09-10-2022 | 4:07 PM

Colombo (News 1st) வடக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தடம்புரண்ட உத்தரதேவி ரயில் மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உத்தரதேவி ரயிலானது, நேற்று(08) காலை தம்புத்தேகம மற்றும் செனரத்கம இடையே தடம் புரண்டது.

அதன் காரணமாக வடக்கு மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.