காலி முகத்திடலில் அமைதியின்மை; ஐவர் கைது

காலி முகத்திடலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலியின் போது ஐவர் கைது

by Staff Writer 09-10-2022 | 10:00 PM

Colombo (News 1st) போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்காக காலி முகத்திடலில் நடத்தப்பட்ட நினைவஞ்சலியின் போது 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மக்கள் போராட்டக்கள வீரர்களை நினைகூரும் வகையில் காலி முகத்திடலில் இன்று(09) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு பொலிஸார் இடையூறு செய்தனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் சிலரை பொலிஸார் கைது செய்தனர்.