Tap & Go முற்கொடுப்பனவு அட்டை அறிமுகம்

சுற்றுலா பயணிகளுக்காக Tap & Go முற்கொடுப்பனவு அட்டை அறிமுகம்

by Bella Dalima 08-10-2022 | 4:20 PM

Colombo (News 1st) சுற்றுலா மற்றும் எரிசக்தி அமைச்சகங்கள் இணைந்து புதிய Tap & Go முற்கொடுப்பனவு அட்டையினை சுற்றுலா பயணிகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ளன.

இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளால் நாடளாவிய ரீதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும்.   

அமெரிக்க டொலர்களை செலுத்தி குறித்த அட்டையினை பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கான எரிபொருள் முற்கொடுப்பனவு அட்டையில் ( Prepaid Fuel Card) அதிகபட்சமாக 300 அமெரிக்க டொலர்களை செலுத்த முடியும்.

முற்கொடுப்பனவு அட்டைகள் 2 வருட காலத்திற்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.