22 திருத்தம்: ஒக்டோபர் 20, 21-இல் விவாதம்

22 திருத்தம்: ஒக்டோபர் 20, 21 ஆம் திகதிகளில் விவாதம்

by Bella Dalima 07-10-2022 | 6:03 PM

Colombo (News 1st) 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பிற்குரிய விவாதத்தை எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட வரைபு தொடர்பான முதலாம் வாசிப்பை எதிர்வரும் 18 ஆம் திகதி நடத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.