.webp)
Colombo (News 1st) இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
நிகழ்வாண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று (03) முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் Alain Aspect, அமெரிக்காவின் John F. Clauser மற்றும் ஆஸ்திரியாவின் nton Zeilinger ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்காக 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
தொடர்ந்து, நாளை வேதியியலுக்கான நோபல் பரிசும் அதைத் தொடர்ந்து பிற துறைகளுக்கான நோபல் பரிசும் அடுத்தடுத்த நாட்களில் அறிவிக்கப்படவுள்ளன.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அமைதிக்கான நோபல் பரிசுநோர்வேயிலும் பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.