.webp)
Colombo (News 1st) தம்புத்தேகமவில் வங்கியில் கொள்ளையிடச் சென்ற 2 சந்தேகநபர்களை கைது செய்த பொலிஸ் சார்ஜன் B.A.புத்திக குமார, உப பொலிஸ் இன்ஸ்பெக்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
தம்புத்தேகம பகுதியில் கடந்த 26ஆம் திகதி வர்த்தகர் ஒருவரால் வைப்பிலிடுவதற்காக கொண்டுசெல்லப்பட்ட 2 கோடி ரூபாவிற்கும் அதிக பணத்தை கொள்ளையடிக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில், பொலிஸ் சார்ஜன் B.A.புத்திக குமார, கொள்ளையர்களுடன் போராடி சந்தேகநபர்களை கைது செய்தார்.
இதன்போது கொள்ளையர்கள் வசமிருந்த துப்பாக்கியையும் பொலிஸ் சார்ஜன் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.