.webp)
Colombo (News 1st) இன்று (01) முதல் 2.5 வீத சமூக பாதுகாப்பு வரி நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சில திருத்தங்களால் மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதை தாம் அறிவதாகவும் குறுகிய கால நோக்கத்திற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வரியினால் சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.