.webp)
Colombo (News 1st) வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஐக்கிய நாடுகள் சபையின் 77ஆவது பொதுச் சபை அமர்வில் இலங்கை நேரப்படி இன்று(25) அதிகாலை 2.30 மணியளவில் உரை நிகழ்த்தினார்.
இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் நீண்ட விளக்கமொன்றை வழங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமர்வில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்குச் சென்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர், ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகள் பல தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி வழங்கிய இரவு விருந்தில் கலந்து கொண்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன் ஆகியோரையும் சந்தித்துள்ளார்.