அஹூங்கல்ல துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி

அஹூங்கல்ல துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி

by Staff Writer 24-09-2022 | 4:50 PM

Colombo (News 1st) அஹூங்கல்ல - போகஹப்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது நேற்றிரவு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது, இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 29 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மற்றொரு நபர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.