தேசிய சபை உறுப்பினர்களின் பெயர்கள் கையளிப்பு

தேசிய சபைக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் சபாநாயகரிடம் கையளிப்பு

by Bella Dalima 23-09-2022 | 4:39 PM

Colombo (News 1st) தேசிய சபைக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

டக்ளஸ் தேவானந்தா, ஹாபிஸ் நசீர் அஹமட், டிரான் அலஸ், சிசிர ஜயக்கொடி, சிவநேசத்துரை சந்திரகாந்தன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரவூப் ஹக்கீம், பவித்ரா வன்னியாராச்சி, வஜிர அபேவர்தன ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதனை தவிர, A.L.M.அதாவுல்லா, திஸ்ஸ விதாரண, ரிஷாட் பதியுதீன், விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, பழனி திகாம்பரம், மனோ கணேசன், உதய கம்மன்பில மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் பெயர்களும் தேசிய சபைக்கு முன்மொழியப்பட்டுள்ளன.

நாமல் ராஜபக்ஸ, ஜீவன் தொண்டமான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அத்துரலியே ரத்தன தேரர், அசங்க நவரத்ன, அலி சப்ரி ரஹீம், C.V.விக்னேஸ்வரன், வீரசுமன வீரசிங்க மற்றும் சாகர காரியவசம் ஆகியோரும் 
இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும்  டலஸ் அழகப்பெரும அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் தேசிய சபைக்கு உள்வாங்கப்படவில்லை.