கடனை மறுபரிசீலனை செய்யுமாறு கென்யா கோரிக்கை

ஏழை ஆபிரிக்க நாடுகளின் கடனை மறுபரிசீலனை செய்யுமாறு கென்ய ஜனாதிபதி கோரிக்கை

by Bella Dalima 23-09-2022 | 4:58 PM

Kenya: ஏழை ஆபிரிக்க நாடுகளின் கடனை மறுபரிசீலனை செய்யுமாறு செல்வந்த நாடுகளுக்கும் உலகளாவிய கடன் வழங்குநர்களுக்கும் கென்ய ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

கடன் திருப்பிச் செலுத்துதலின் பெரும் சுமையானது, கண்டத்தின் வளர்ச்சி ஆதாயங்களைத் துடைத்துவிடும் அபாயம் உள்ளதாக கென்ய ஜனாதிபதி William Ruto கூறியுள்ளார்.

ஆபிரிக்க நாடுகள் மோதல்கள் மற்றும் பருவநிலை மாற்றத்தால் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கென்யா 6.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மீள செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.