.webp)
Colombo (News 1st) மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகரை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
சந்தேகநபரிடமிருந்து 37 கிராம் 60 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.