.webp)
Colombo (News 1st) நஞ்சு கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையில் பீடைகொல்லி பதிவு அலுவலகத்தினால் அவ்வாறான எந்தவொரு ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் அறிக்கையைப் பயன்படுத்தி இது தொடர்பான உண்மைக்குப் புறம்பான செய்தி தயாரிக்கப்பட்டுள்ளதாக பீடைகொல்லி பதிவு அலுவலகத்தின் பதில் பதிவாளர் லசந்த ரத்னவீரவை மேற்கோள்காட்டி ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வௌியிட்டுள்ளது.
அதன் உள்ளடக்கத்திலும் குளறுபடிகள் காணப்படுவதாக பீடைகொல்லி பதிவு அலுவலகத்தின் பதில் பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான உண்மைக்கு புறம்பான செய்திகள் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், இவ்வாறான விடயங்களை தெரிவிக்கும் போது உரிய தரப்பினரிடம் விசாரணைகளை மேற்கொள்வது மிகவும் பொருத்தமானது என பதில் பீடைகொல்லி பதிவாளர் மேலும் தெரிவித்தார்.