தங்கம் விலை மீண்டும் வீழ்ச்சி

தங்கம் விலை மீண்டும் வீழ்ச்சி

by Bella Dalima 16-09-2022 | 7:05 PM

Colombo (News 1st) நாட்டில் தங்கம் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. 

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1703.9 அமெரிக்க டொலர்களாக நேற்று (15) பதிவாகியிருந்தது. எனினும், 1665.78 அமெரிக்க டொலர்களாக தங்கத்தின் விலையில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

இந்த பின்புலத்தில் நாட்டிலும் தங்கத்தின்  விலை வீழ்ச்சியடைந்துள்ளது. 

கொழும்பு செட்டித்தெருவில்  24 கரட்  ஒரு பவுண் தங்கத்தின் விலை 1,74,000 ரூபாவாக உள்ளது. 22 கரட் ஒரு பவுண் தங்கம் 1,61,000 ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.  

எனினும் தங்க ஆபரணங்களின் செய்கூலி, சேதாரம் அடங்கலாக  இந்த விலையில் சிறிய மாற்றம் ஏற்படுமென அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.விஜயகுமார்  தெரிவித்தார்.  

இந்த வருடத்தின் ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில், தற்போது தங்கத்தின் விலையில் பாரிய  வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் ஒரு  பவுண்  தங்கம் விலை 1,25,000 ஆக காணப்பட்டது .

எனினும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரமளவில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 2  இலட்சத்தை தாண்டியது.  

இந்த நிலையில், மீண்டும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது. 

உலக சந்தையில் தங்கத்தின் விலை 03 மாதங்களுக்குள் 6.88 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.