மெகசின் சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளில் ஒருவர் சுகவீனம்

by Bella Dalima 15-09-2022 | 4:50 PM

Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 13 கைதிகள் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒருவர் சுகவீனமுற்று சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தம்மை விடுதலை செய்யுமாறு வலியறுத்தி 13 கைதிகள் கடந்த 6 ஆம் திகதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்களில் சுகவீனமுற்ற ஒருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளரும் ஊடகப்பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பல்வேறு தரப்பினரும் கைதிகளிடம் கோரிய போதிலும், அவர்கள் கைவிடாது தொடர்ந்தும் உணவினை தவிர்த்து வருவதாக அவர் கூறினார்.

அவர்களின் உடல் நிலை தொடர்பில் வைத்தியர்கள் தினமும் கண்காணித்து வருவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.