மக்கள் பணியில் கம்மெத்தவுடன் கைகோர்த்த வைத்திய அதிகாரிகள்

by Staff Writer 14-09-2022 | 8:16 PM

Colombo (News 1st) நாட்டின் அநேகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், அவர்களுக்கு இயன்றளவு சக்தியை வழங்க கம்மெத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது. 

இதற்காக இலங்கையின் வைத்திய அதிகாரிகள் நிறுவனமொன்றுடன் கம்மெத்த இன்று உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிர்கதியாகியுள்ள குடும்பங்களை தெரிவு செய்து, அந்த குடும்பங்களுக்கு நீண்டகாலமாக கம்மெத்த உதவிக்கரம் நீட்டி வருகிறது.

ஏனையவர்களின் துன்பத்தை காணும்போதெல்லாம் மனமுருகும் எம்மவர்களின் ஒத்துழைப்புடன், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த  மக்கள் பணிக்கு புதிய சக்தியை  வழங்க இலங்கை வைத்திய அதிகாரிகளின் நிறுவனமான College of General Practitioners of Sri Lanka நிறுவனம் முன்வந்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்கவும் அந்த குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளின் கல்விக்கு உதவிகளை வழங்கவும் இந்த திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பாக College of General Practitioners of Sri Lanka நிறுவனம் மற்றும் கம்மெத்த பிரதிநிதிகளுக்கு இடையே இன்று கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது.

திட்டத்திற்கான முதலாவது உதவித் தொகையும் இன்று வழங்கப்பட்டது.