.webp)
Colombo (News 1st) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் நேற்று (13) இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung-ஐ சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுதல், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குல் தொடர்பிலான விசாரணையில் காணப்படும் முடக்க நிலை, மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.