தமிழர்களுக்கு கண்ணியமான வாழ்க்கை வேண்டும்

ஈழத் தமிழர்களுக்கு கண்ணியமான வாழ்க்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

by Staff Writer 13-09-2022 | 5:59 PM

Colombo (News 1st) ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்க்கை உறுதிப்படுத்தப்பட வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அறிக்கை ஒன்றினூடாக அவர் இதனை கூறியுள்ளார்.

ஜெனிவாவில் நேற்றைய கூட்டத்தொடரின் போது, இந்திய தூதுவர் வலியுறுத்திய 13 ஆவது திருத்த அமுலாக்கம், மாகாண சபைகளுக்கான அதிகாரம் மற்றும் தேர்தல் உள்ளிட்ட விடயங்களை நிறைவேற்றுவதில், அளவிடக்கூடிய முன்னேற்றம் எதனையும் இலங்கை அரசு எட்டவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஈழத் தமிழர்களுக்கான அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு இனியும் தாமதிக்காமல் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது என்ற போதிலும், அது போதுமானதாக இல்லையென பா.ம.க நிறுவனர் தெரிவித்துள்ளார்.