ஆசிய கிரிக்கெட் கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை

6ஆவது தடவையாகவும் ஆசிய கிரிக்கெட் கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை

by Staff Writer 12-09-2022 | 3:29 PM

Colombo (News 1st) ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று ஆறாவது தடவையாகவும் இலங்கை அணி கிண்ணத்தை சுவீகரித்தது.

2022 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23 ஓட்டங்களால் வீழ்த்தி, இலங்கை இவ் வருடத்துக்கான கிண்ணத்தை தனதாக்கியது.

துபாயில் நேற்று(11) நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பானுக்க ராஜபக்ஸ 71 ஓட்டங்களை குவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெற்றியிலக்கை எட்ட முடியாமல் பாகிஸ்தான் அணி 147 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.