தமித்தா அபேரத்னவிற்கு பிணை

by Staff Writer 12-09-2022 | 2:31 PM

Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடிகை தமித்தா அபேரத்னவிற்கு இன்று(12) பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று(12) உத்தரவிட்டார்.

கடந்த 07ஆம் திகதி பத்தரமுல்லை - தியத்த உயன பகுதியில் வைத்து, கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் தமித்தா அபேரத்ன கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.  

கடந்த மே மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பில் தமித்தா அபேரத்ன கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.