.webp)
Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இன்று(12) ஜெனீவா நகரில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் 07ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்று மனித உரிமைகள் பேரையில் உரை நிகழ்த்தவுள்ளார்.
இதேவேளை, கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் காவிந்த ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் சட்டத்தரணி எரந்த வெலிஅங்கே ஆகியோரும் ஜெனீவாவிற்கு பயணித்துள்ளனர்.