.webp)
Colombo (News 1st) இலங்கைக்கு மேலும் 20 மில்லியன் டொலர் நிதியை அமெரிக்கா வழங்கவுள்ளதாக சர்வதேச அபிவிருத்திக்கான(USAID) அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் அறிவித்துள்ளார்.
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
சமந்தா பவர் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு நேற்று(10) முற்பகல் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.