சீனாவில் நிலநடுக்கத்தில் 65 பேர் பலி

சீனாவில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரிப்பு

by Bella Dalima 06-09-2022 | 3:54 PM

China: சீனாவில் நேற்று (05) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. 

பாதுகாப்புக் கருதி 50,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் 16 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், பல இடங்களில் மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் நேற்று நண்பகல் 12.25 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 16 கிலோமீட்டர்  ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.8 அலகுகளாக பதிவானது. 

நிலநடுக்கம் மையம் கொண்ட பகுதியில் ஏராளமான கிராமங்கள் இருந்ததால்,  65 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன்,  150 போ் காயமடைந்துள்ளனர்.