.webp)
Colombo (News 1st) அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஊடாக, துறைசார் அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு நேரடியாக பணிப்புரையை விடுக்குமாறு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்ட செயலகங்களை மையப்படுத்தி, மாவட்ட இடர் முகாமைத்துவ இணைப்பு பிரிவு மற்றும் அவற்றுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்கும் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் , வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் என்பன செயற்படுகின்றன.