IMF தலைவர் விடுத்துள்ள அறிவித்தல்

சர்வதேச நாணய நிதியம் - இலங்கை இடையிலான இணக்கப்பாடு மகிழ்ச்சியளிக்கிறது - IMF தலைவர்

by Staff Writer 04-09-2022 | 3:12 PM

Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இலங்கைக்கும் இடையே ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவான கடன் வசதியை இலங்கைக்கு வழங்குவதற்கான சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை, இலங்கைக்கு முக்கியமானதொரு நடவடிக்கையாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.