.webp)
Colombo (News 1st) பெண் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் லக்ஸ்மன் திசாநாயக்க சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலையில் உள்ள அவரின் கட்சி அலுவலக கட்டடத்தில் குறித்த பெண் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கம்புறுகல பகுதியை சேர்ந்த 36 வயதான சகுந்தலா வீரசிங்க என்ற பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் இன்று காலை கட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.