.webp)
Germany: ஜெர்மனியில் 50 வருடங்களின் பின்னர் அதிகபட்ச பணவீக்கம் இம்மாதம் பதிவாகியுள்ளது.
ஒரு வருடத்திற்குள் பொருட்களின் விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஒரு வருடத்திற்குள் ஜெர்மனியின் பணவீக்கம் 8.8 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் அந்நாட்டின் பணவீக்கம் 8.5 வீதமாக காணப்பட்டது.
உக்ரைனில் இடம்பெறும் மோதல்களால் அங்கு எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.