.webp)
Colombo (News 1st) நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளுக்கான பிரதம அதிகாரி Peter Breuer, பிரதி தலைமை அதிகாரி Masahiro Nozaki, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Tubagus Feridhanusetyawan உள்ளிட்ட அதிகாரிகள் இதன்போது பங்கேற்றிருந்தனர்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக
ஐக்கிய மக்கள் சக்தியின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.