.webp)
Colombo (News 1st) முட்டையொன்றை 50 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கான அனுமதியை வர்த்தகர்களுக்கு வழங்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் யோசனை முன்வைக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உற்பத்தி விலை தொடர்பில் ஆராய்ந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
முட்டையொன்றின் விலையை 43 மற்றும் 45 ரூபாவாக நிர்ணயித்து அண்மையில் விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டது.
எனினும், சந்தையில் தற்போதும் 60 ரூபாவிற்கும் அதிக விலையில் முட்டை விற்பனை செய்யப்படுகின்றது.