.webp)
Colombo (News 1st) 2021 கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை அதிபர்கள், இன்று(29) முதல் தரவிறக்கம் செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவை உயர்தர பரீட்சைக்கு தோற்ற எதிர்பார்த்துள்ள பரீட்சார்த்திகள், எதிர்வரும் முதலாம் திகதி முதல் 08ஆம் திகதி வரை அதற்காக விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
2021 கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று(28) வௌியிடப்பட்டன.
அதற்கமைய, பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk எனும் இணையத்தள முகவரி ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.
2021 க.பொ.த உயர்தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 272,682 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இவர்களில் 171,497 பேர், பல்கலைக்கழகத்திற்கான வாய்ப்பை பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
49 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.