.webp)
Colombo (News 1st) நாட்டில் நிலவும் நெருக்கடியினால் மேலும் 8 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களை சேர்ந்த 8 பேரே படகு மூலம் தனுஷ்கோடி - முதலாம் மணற்திட்டில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
இவர்கள் மணற்திட்டில் சிக்கியுள்ளதாக மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், தமிழக கரையோர பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை சென்றடைந்தவர்களில் 5 சிறுவர்களும் அடங்குகின்றனர்.
8 பேரும் விசாரணைகளின் பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 157 இலங்கை பிரஜைகள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.