மே 9 தாக்குதல்: பெண் ஒருவருக்கு விளக்கமறியல்

SLPP ஆதரவாளர்களை பேர வாவிக்குள் தள்ளிவிட்ட குற்றச்சாட்டில் கைதான பெண்ணுக்கு விளக்கமறியல்

by Bella Dalima 25-08-2022 | 4:05 PM

Colombo (News 1st) கடந்த மே மாதம் 09 ஆம் திகதி பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களை கொம்பனித்தெருவில் பேர வாவிக்குள் தள்ளிவிட்டதாகக் கூறப்படும் பெண்ணை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரை அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு மீண்டும் திரும்பியவர்களை, பேர வாவிக்குள் தள்ளிவிட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போதே கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேகநபரை கைது செய்திருந்தனர்.

சந்தேகநபர் தொடர்பான அடையாள அணிவகுப்பு இன்று நடைபெறவிருந்த நிலையில், சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் அந்த நடவடிக்கை பிற்போடப்பட்டது.