கையடக்க தொலைபேசிகளை ஒப்படைக்குமாறு உத்தரவு

கையடக்க தொலைபேசிகளை CID-இல் ஒப்படைக்குமாறு சனத் நிஷாந்த உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் உத்தரவு

by Bella Dalima 24-08-2022 | 4:14 PM

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் டான் பிரியசாத் ஆகியோருக்கு தமது கையடக்க தொலைபேசிகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி கோட்டாகோகம போராட்டக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மூவரும் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் கைத்தொலைபேசிகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கும் வரை, அவர்களை நீதிமன்றில் தடுத்து வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.