.webp)
Colombo (News 1st) MTV Channel தனியார் நிறுவனம் Digital Satellite தொலைக்காட்சி சேவையான FREESAT உடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது .
அதனூடாக இன்று முதல் சிரச TV, TV1, நியூஸ்ஃபெஸ்ட் மற்றும் சக்தி TV ஆகிய அலைவரிசைகளை பார்வையிடலாம்.
நவீன DVB - S TWO X தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பாகும் Digital Satellite தொலைக்காட்சி சேவையான FREESAT மூலம் இலவசமாக எமது அலைவரிசைகளை பார்வையிட முடியும்.
MTV செனல் தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுசார தினால் மற்றும் FREESAT-இன் நிறைவேற்று அதிகாரி கமிந்த சமரகோன் ஆகியோர் இன்று இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.