.webp)
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் நாளையும் (24) 03 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, A முதல் L வரையான வலயங்கள் மற்றும் P முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த வலயங்களில் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
CC வலயங்களில் காலை 06 மணி முதல் 8.30 வரையிலான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
MNOXYZ வலயங்களில் காலை 5.30 முதல் 8.30 வரையிலான காலப்பகுதியில் 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.