.webp)
Colombo (News 1st) நீதிமன்றத்தில் முன்னிலையாகாத போராட்டக்கள செயற்பாட்டாளர் டொக்டர் பெத்தும் கேர்னரை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இன்று பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர் மன்றில் ஆஜராகாததால் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குணவெல இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்தார்.
குறித்த நாளில் பொல்துவ சந்தியில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் 50 பேரையும் ஔிப்படங்கள் ஊடாக அடையாளம் காண்பதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கில், அவற்றை ஊடகங்களுக்கு வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றவியல் பிரிவு இன்று மன்றில் சுட்டிக்காட்டியது.
இந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்து கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.