.webp)
Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரும் பேலியகொடை விசேட விசாரணைப் பிரிவில் தடுத்துவைத்து விசாரணை செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவின் கீழ், சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,
ஹஷான் ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவை பெறுவதற்கு பொலிஸார் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை கோரியிருந்தனர்.
கடந்த 18ஆம் திகதி நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வசந்த முதலிகே உள்ளிட்ட 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.