.webp)
Colombo (News 1st) யாழ்.மாவட்டத்திற்கு பெரும்போகத்திற்கான உரத்தை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்.மாவட்டத்தில் சிறுபோக செய்கை முன்னெடுக்கப்படாத நிலையில், பெரும்போக செய்கை ஆரம்பமாகவுள்ளமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி பணிப்பாளர் நாயகம் எம்.எல்.அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறுபோகத்தில் நெற்செய்கைக்குத் தேவையான உரத்தை விநியோகிக்கும் நடவடிக்கைகள், தற்போது பூர்த்தியடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, இந்திய கடன் வசதியின் கீழ் நாட்டிற்கு கிடைத்துள்ள 21,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை, தேயிலை மற்றும் இஞ்சி செய்கைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுதேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையூடாக, தேயிலை செய்கையாளர்களுக்கான உர விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றது.