.webp)
Colombo (News 1st) முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முட்டை விநியோகத்தை நிறுத்த அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நஷ்டத்துடன் முட்டை விநியோகத்தை முன்னெடுக்க முடியாதென சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம்(19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகும்.
கபில நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.