.webp)
Colombo (News 1st) 'பாராளுமன்றத்தைக் கலைத்து, மக்கள் ஆணைக்கு இடம் வழங்குங்கள்' எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
மக்கள் ஆணைக்கு இடம் வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டக்காரர்கள் விஜேராம சந்தியிலிருந்து ஹைலெவல் வீதியூடாக நுகேகொடை வரை பயணித்து, ஆனந்த சமரக்கோன் திறந்த விளையாட்டரங்கில் ஒன்றுகூடினர்.
இதன்போது உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர், அனுரகுமார திசாநாயக்க, போராட்டக்காரர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் அரசாங்கத்திற்கு தனது கண்டனங்களை வௌியிட்டார்.
