வைத்தியசாலை சென்று பிரபல நடிகர் ஜெக்சன் அந்தனியை பார்வையிட்ட ஜனாதிபதி

by Bella Dalima 19-08-2022 | 8:11 PM

Colombo (News 1st) விபத்தை எதிர்கொண்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகர் ஜெக்சன் அந்தனியை பார்ப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று சென்றிருந்தார். 

வைத்தியசாலைக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நடிகர் ஜக்சன் அந்தனியை பார்வையிட்டதன் பின்னர், அவரது குடும்பத்தவர்களுடன் கலந்துரையாடினார்.

தேசிய வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில்  ஆராய்ந்த ஜனாதிபதி, நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மருத்துவ நெருக்கடியை நிவர்த்திக்கும் பாரிய பொறுப்பு தமக்கு இருப்பதாகக் கூறினார்.