மின்வெட்டு காலத்தை அதிகரிக்க தீர்மானம்

நாளை(16) முதல் மின்வெட்டு காலத்தை அதிகரிக்க தீர்மானம்

by Staff Writer 15-08-2022 | 3:05 PM

Colombo (News 1st) நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ளது.

மின்பிறப்பாக்கியில் ஏற்பட்டுள்ள கோளாறு தொடர்பில் தொழில்நுட்ப குழு ஆராய்வதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். 

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் முதலாவது பிறப்பாக்கி செயலிழந்துள்ள காரணத்தினால், நாளை(16) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலம் அதிகரிக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

செயலிழந்துள்ள மின்னுற்பத்தி நிலைய பிறப்பாக்கியின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவருவதற்கு 14 முதல் 16 நாட்கள் தேவைப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.